Breaking News

விக்டோரியா மாகாணத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைபடுத்தப்பட்டு இருந்ததால், தொற்று பரவல் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Corona infection has been diagnosed in 57 new people in the state of Victoria. Since most of these were isolated, the risk of infection was avoided.

விக்டோரியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாகாண அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49,607 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 44 நபர்கள் தொடர்பறிதல் முறையில் ஏற்கனவே தனிமை படுத்தப்பட்டவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Corona infection has been diagnosed in 57 new people in the state of Victoria. Since most of these were isolated, the risk of infection was avoidedஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிமீயர் டேனியல் ஆண்ட்ரூஸ், அரசின் தொடர்பறிதல் திட்டம் நல்ல பலன் தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தும் முகாமில் இருந்தவர்களில் சுமார் 3000 பேர் தற்போது வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 13 ஆம் நாளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பேருக்கு கொரோனா எவ்வாறு பரவியது என்பது தெரியவில்லை என்று கோவிட் சிறப்பு அதிகாரி ஜெரோன் வெய்மர் தெரிவித்துள்ளார்.

இந்த 3 பேரும் அஸ்காட் வேல், டான்கேஸ்டர், கிலென்ராய் பகுதியை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில் தொற்று பரவ வாய்ப்புள்ள பகுதிகளாக 550 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Corona infection has been diagnosed in 57 new people in the state of Victoria. Since most of these were isolated, the risk of infection was avoided..மேலும் அனுமதியில்லாமல், வடக்கு கவுல் பீல்ட் பகுதியில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்திய 4 பேருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர்களுக்கு தனிமை படுத்துதல் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், சுமார் $350000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விக்டோரியாவில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்றால், கொரோனா கட்டுப்பாட்டு வியூகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3iUOju9