Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் தனது 4 குழந்தைகளை பராமரிக்காத தாய் : செப்டம்பர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிப்பு

Mother not caring for her 4 children in Adelaide, South Australia. Court to rule in September

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் தனது நான்கு குழந்தைகளை பராமரிக்காத தாய் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த விவகாரத்தில் செப்டம்பர் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

34 வயதான Glenys Kupfer முறையே 8, 3, 2 மற்றும் 12 மாத குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவர் ஒற்றை பெற்றோர் ஆக குழந்தைகளை வைத்துள்ள நிலையில் அவர்களை முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக உணவு, உடை உள்ளிட்டவை வழங்காதது. சுகாதாரமான முறையில் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் Glenys Kupfer மீது உள்ளன.

Mother not caring for her 4 children in Adelaide, South Australia. Court to rule in September..Glenys Kupfer வன்முறைச் சம்பவம் ஒன்றில் தனது தம்பி உயிரிழந்ததை நேரில் பார்த்த நிலையில் அதிலிருந்து இவர் உளவியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளதாகவும், குழந்தைகளை, வீட்டை பராமரிப்து உள்ளிட்ட எதையும் செய்வதில்லை என்று கூறப்படுகிறது. வீட்டில் குழந்தையின் மலம், ப்ரிட்ஜில் அழுகிய உணவுப் பொருட்கள் என அனைத்தும் அப்படியே இருப்பதாகவும் மிக மோசமான நிலையில் குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நான்கு குழந்தைகளுடன் வசிப்பதற்கு போதுமான அளவு இடம் படுக்கை வசதிகள் அங்கு இல்லை என்றும் மிகவும் அழகாகவும் துர்நாற்றம் வீசும் வகையிலும் அந்த இடம் பராமரிப்பின்றி இருந்ததாகவும் காவல்துறை வழக்கறிஞர் Scott Mesecke கூறியுள்ளார்.

தனது சகோதரனின் கொடூரமான மறைவுக்குப் பின்னர் அவர் போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டதாகவும், ஒற்றைப் பெற்றோராக இருப்பதன் காரணமாகவும் கடுமையான மனப்பிறழ்வுக்கு ஆளாகி இருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Mother not caring for her 4 children in Adelaide, South Australia. Court to rule in September.குழந்தைகளை பராமரிக்காமல் புறக்கணிப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அதற்கான உரிய விளைவுகளை பெற்றோர் என்ற முறையில் அவர் சந்தித்தாக வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் இருந்து Kupfer- ஐ மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Link Source: https://bit.ly/3ghBtVk