Breaking News

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் Zhang Zhan : சிறையில் உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதான பத்திரிகையாளர் Zhang Zhan. ஊஹான் மாகாணத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களையும் அதனை கையாண்ட அரசின் மெத்தனப் போக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்தமைக்காக சீன அரசு Zhang Zhan -ஐ கைது செய்தது.

மேலும், தனது செய்திகளை எஸ்எம்எஸ், வீடியோ, வீசாட், டிவிட்டர், யூடியூப் மூலம் உலகம் முழுவதும் பரவச் செய்தார். இதனால் கொரோனா உண்மைகளை மறைக்க தடையாக இருந்ததால் Zhang Zhan -ஐ சீன அரசு கைது செய்தது. சுமார் 7 மாதத்திற்குப் பிறகு இந்த வழக்கு ஷாங்காயின் புடோங்க் மாவட்ட நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் Zhang Zhan-க்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் Zhang Zhan உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு 40 கிலோ வரை தனது எடையை இழந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை விடுவிப்பது தொடர்பாக அவரது வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகிறார்.

Journalist Zhang Zhan arrested for publishing information about corona virus in China's Houkon province, hospitalized due to ill health due to prison hunger strikeZhang Zhan -ன் தாயார் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் அவரை சிறையில் சந்திக்க வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டது தொலைபேசி மூலமாக மட்டுமே
Zhang Zhan உடன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டது. மேலும் சிறையில் உள்ள மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அங்கு போதுமான மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை என்றும் பத்திரிகையாளரின் வழக்கறிஞர் Jane Wang கூறியுள்ளார்.

ஜூலை 31ஆம் தேதியிலிருந்து Zhang Zhan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உடல் நலம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதனை கருத்தில் கொண்டு அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது தாயாரும் வழக்கறிஞரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஷங்காய் புங்கார்ட் நீதிமன்றம் ஊகான் மாகாணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை செல்போன் வீடியோக்கள் மூலமாக அம்பலப்படுத்தியதாக Zhang Zhan மீது குற்றம்சாட்டி தண்டனை விதித்திருந்தது.

Link Source: https://ab.co/3k5o2Zp