Breaking News

ஆபத்தான ஸ்பைவேரை உருவாக்கிய குற்றத்தில் 25 வயது இளைஞர் கைது..!!

தொழில்நுட்பத்தை சீர்குலைக்கும் ஸ்பைவேரை உருவாக்கி சமூக விரோதிகளிடம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 24 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

25-year-old youth arrested for creating dangerous spyware

கான்பெர்ரா மாநிலத்தின் சைபர் கிரைம் பிரிவுத் தலைமை அதிகாரி கிறிஸ் கோல்டுஸ்மித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விக்டோரியாவைச் சேர்ந்த 25 வயதான ஃப்ராங்கிஸ்டன் என்கிற இளைஞர், 15 வயதில் இருந்தபோது ரிமோட் ஆக்சஸ் ட்ரோஜன் என்கிற ஸ்பைவேரை உருவாக்கியுள்ளார். இம்மினெண்டட் மானிட்டர் என்கிற பெயரில் அதை 128 நாடுகளைச் சேர்ந்த 14,500 பேரிடம் விற்பனை செய்துள்ளார்.

25-year-old youth arrested for creating dangerous spyware,தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் இந்த ஸ்பேவரை அந்த இளைஞர், உள்நாட்டைச் சேர்ந்த சிலருக்கும் விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் அவர் 300,000 டாலர்கள் முதல் 400,000 டாலர்கள் வரை வருமானம் ஈட்டியுள்ளார். இளைஞர் ஃப்ராங்கிஸ்டனிடம் இருந்து ஸ்பைவேரை வாங்கிய 100 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேபால் ஆவணங்கள் மூலம் அவர்கள் யார் என்கிற விபரங்கள் தெரியவந்துள்ளன. குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்தற்காக, அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரையும் பிரிஸ்பேன் மாவட்டம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் முதல் இந்த குற்றச்செயல் தொடர்பான விசாரணை துவங்கப்படும் என்று தலைமை அதிகாரி கிறிஸ் கோல்டுஸ்மித் கூறினார்.