Breaking News

நிலநடுக்கத்துக்கு காப்பீடு தொகை பெறுவதில் தொடரும் சிக்கல்- தீர்வு என்ன?

விக்டோரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.

Continuing Problem in Obtaining Insurance Amount for Earthquake,

சேதமடைந்த வீடுகளுக்கு காப்பீடு கோரிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார்.

கொரோனாவை தொடர்ந்து விக்டோரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கச் சம்பவம், ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய காப்பீடு தொடர்பான புகார்களை உருவாக்கியுள்ளது.

Continuing Problem in Obtaining Insurance Amount for Earthquake.கடந்தாண்டு செப்டம்பர் 22-ம் தேதி விக்டோரியா மாநிலத்திலுள்ள மேன்ஸ்ஃபீல்டு என்கிற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக பதிவானது. இந்த சம்பவத்தில் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதற்கு காப்பீடு பெறுவதற்காக பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் எந்த காப்பீட்டு நிறுவனமும் இழப்பீடு பெறுவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறி ஆஸ்திரேலிய நிதி புகார்கள் ஆணையத்துக்கு, புகார்கள் குவிந்து வருகின்றன. இதன்மூலம் கொரோனாவுக்கு பிறகு, விக்டோரியா நிலநடுக்கச் சம்பவம் காப்பீடு தொடர்பான புகார் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதுதொடர்பாக பேசிய நிதி உரிமைகள் சட்ட சேவைக்கான இயக்குநர் ஜேன் ஃபோலே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் வழங்கக்கூடிய தொகை மக்களுக்கு போதுவது கிடையாது. அதனால் தாங்கள் ஏமாற்றவிட்டதாக எண்ணி புகார் அளிப்பது அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Continuing Problem in Obtaining Insurance Amount for Earthquakeஆஸ்திரேலியாவில் மொத்தம் 16,000 பேர் காப்பீட்டு தொகை பெறுவதற்கான மனுக்களை அளித்துள்ளனர். இதனுடைய மொத்த மதிப்பு 120 மில்லியன் டாலர்கள். அதில் 60 சதவீத மனுக்கள் கொள்கை விலக்கு அல்லது நிபந்தனை காரணமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. மேலும் சில புகார் வரையறுக்கப்பட்டுள்ள தொகையைவிட அதிகமாக கேட்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 120 கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டு, அதன்மூலம் 300,000 டாலர்கள் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியாவுக்கான நிதி புகார்கள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.