Breaking News

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ள பருவநிலை மாநாடு, கரியமில வாயு வெளியேற்றுதலில் ஆஸ்திரேலியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றவுடன் நடைபெறும் இந்த மாநாடு காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

scott morrison auஇம்மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்தும் அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கபடவுள்ளது. இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் கிறிஸ்டியன் டவுனீ, இக்கூட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் பருவ நிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று தெரித்துள்ளார்.

இது ஆஸ்திரேலியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2050க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்தும் முடிவுக்கு பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்தாலும், ஆஸ்திரேலியா இந்த விவகாரத்தில் ஒப்புதல் தெரிவிக்காமல் இருந்துவந்தது.

carbon dioxideஆனால் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் பருவ நிலை மாற்றத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள US Secretary of State ஆண்டனி பிலிங்கன் நிலக்கரியை பெருமளவு சார்ந்து இருக்கும் நாடுகள் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து சிந்தித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கு உடன்படாத நாடுகளுக்கு உரிய அழுத்தத்தை அமெரிக்கா கொடுக்க தயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2050க்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லா சூழ்நிலையை உருவாக்கும் இலட்சியத்துடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு வரும் நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள 26வது சர்வதேச பருவ நிலை
மாநாட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.