Breaking News

கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதை தடுக்க AstraZeneca தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்று கனடா தெரிவித்துள்ளது.

Canada has said the AstraZeneca vaccine will be used to prevent a third wave of corona

கனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்துவதை அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Canada has said the AstraZeneca vaccine will be used to prevent a third wave of corona 1இந்நிலையில் Ontario மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மேலும் ஒருவருக்கு இரத்த உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் லட்சக்கணக்கானவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் இருவர் இரத்த உறைதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் இந்த பாதிப்பு பத்து லட்சம் பேரில் 4 பேருக்கு மட்டுமே ஏற்படுவதாகவும், அதற்கும் சிகிச்சையளிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கனடாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள National Advisory council for immunisation அமைப்பு, Astra zeneca தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த இரத்த உறைதல் பாதிப்பு குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 50 க்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Ontario மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.