Breaking News

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க தெளிவான ஒழுங்கு முறை தேவை : ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியனாக தேர்வு செய்யப்பட்ட Grace Tame கோரிக்கை.

Clear discipline needed to investigate sexual harassment allegations against political party leaders. Grace Tame request to be voted Australian of the Year.

கடந்த ஜூன் மாதத்தில் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் David O’Byrne மீதான பாலியல் புகாரை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Clear discipline needed to investigate sexual harassment allegations against political party leaders.,. Grace Tame request to be voted Australian of the Year.மது, விருந்தோம்பல் துறையின் இளநிலை உதவியாளராக இருந்த Rachel Midson இடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியது, பொது இடத்தில் இரு முறை முத்தமிட்டது என David O’Byrne மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து எழும் இதுபோன்ற புகார்களை விசாரிப்பதில் ஒழுங்குமுறை தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசியுள்ள ஆண்டின் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட Grace Tame, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்த ஒரு விசாரணை அமைப்பு இதற்கு தேவை என்று கூறியுள்ளார். பணியிட சூழல்களில் எழும் பாலியல் புகார்களை அப்படியே புறக்கணித்து விட்டு செல்லக்கூடாது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதி கிடைக்கப் படவேண்டும் என்றும் Grace Tame கூறியுள்ளார்.

கட்சித் தலைவர்களுக்கான பெயர் புகழ் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும்போது அவர்களை அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதில்லை என்றும், அது அவர்கள் செய்யும் தவறை ஆதரிப்பது போன்றது என்றும் Grace Tame தெரிவித்துள்ளார்.

Clear discipline needed to investigate sexual harassment allegations against political party leaders, Grace Tame request to be voted Australian of the Year.David O’Byrne மீதான பாலியல் புகார்களை விசாரித்த பின்னர் தொழிலாளர் கட்சியின் மாநில செயலாளர் Stuart Benson வெளியிட்டுள்ள அறிக்கையில், சில புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவற்றின் மீதான விசாரணை நடவடிக்கை தொடரும் என்றும் கூறியுள்ளார். நடவடிக்கைக்காக கோரப்பட்டுள்ள பரிந்துரைகள் புகார் அளித்தவருக்கும், சம்மந்தப்பட்ட கட்சி தலைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரையில் உள்ள விசாரணை முறையில் சிக்கல்கள் இருப்பதாகவும் David O’Byrne தெரிவித்துள்ளார்.

Clear discipline needed to investigate sexual harassment allegations against political party leaders., Grace Tame request to be voted Australian of the Year.மேலும் தன்மீதான ஆதாரமற்ற புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர் கட்சியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அந்த விசாரணை அமைப்பிற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியன் Grace Tame கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3yu7TSq