Breaking News

நியூ சவுத் வேல்ஸ் உடனான எல்லைகளை அக்டோபர் இறுதி வரை திறக்கும் திட்டம் இல்லை : தொடர் பரவல் அதிகரித்து வருவதால் குயின்ஸ்லாந்து திட்டவட்டம்

அடுத்த 10 வாரங்களில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் பட்சத்தில் எல்லைகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் குயின்ஸ்லாந்து தலைமை சுகாதார அதிகாரி Jeannette Young தெரிவித்துள்ளார்.

No plans to open borders with New South Wales until the end of October.. Queensland plans to continue expandingSouthern Gold Coast வர்த்தகங்கள் அடுத்த 10 வாரங்களில் கடுமையாக பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எல்லைகளைத் இறக்கும் விவகாரத்தில் குயின்ஸ்லாந்து கடுமையாக இருப்பதாகவும், அத்தியாவசிய முன்கள பணியாளர்களுக்கான அனுமதியை தாண்டி வேறு யாரையும் எல்லைகளுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே நேரம் அத்தியாவசிய பணியாளர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி ஆவது போட்டு இருக்க வேண்டும் என்றும் சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

வர்த்தக காரணங்களுக்காக வேறு மாகாணங்களுக்கு வருபவர்களை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் இல்லை என்றும் Southern Gold Coast
தலைவர் தெரிவித்துள்ளார்.

No plans to open borders with New South Wales until the end of October.,. Queensland plans to continue expandingஎல்லைகளை திறப்பது தொடர்பாக மிகவும் தீவிரமாக காத்திருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், எல்லைகள் திறப்பு தொடர்பான முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் எல்லைகளுக்கான ஆணையர் James McTavish கூறியுள்ளார். குயின்ஸ்லாந்து மேற்கொள்ளும் எல்லை தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் தாங்கள் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2XTu4oB