Breaking News

ஆஸ்திரேலிய தேசிய கொடியுடன், தூதரக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் தன் குடும்பத்துடன், காபுல் விமான நிலையத்தில் மீட்பு விமானத்தை எதிர்நோக்கி காத்துக்கிடக்கின்றனர்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளிநாட்டுப் படைகள், காபுலை விட்டு வெளியேற வேண்டும் என்று, தாலிபான்கள் கெடு விதித்துள்ளனர்.

இதனால், ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டினர் உட்பட ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்களும் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புக காபூல் விமான நிலையத்தில் பல நாட்களாக காத்துக்கிடக்கின்றனர்.

இதனால் காபூல் விமான நிலையத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஆஸ்திரேலி தூதரகத்தில் பணி புரிந்த முன்னாள் பாதுகாப்பு அதிகாரி, தன் குடும்பத்துடன் கையில் ஆஸ்திரேலிய கொடியுடன் காத்துக்கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

A former embassy security guard with the Australian national flag and his family wait for a rescue plane at Kabul airport..இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் குழு, முன்னாள் பாதுகப்பு வீரரின் குடும்பம் கழிவு நீர் கால்வாயில் காத்துக்கிடப்பதாக தெரிவித்துள்ளது. தங்களின் அடையாளத்தை தெரிவிக்க ஆஸ்திரேலிய தேசிய கொடியை கையில் ஏந்தியிருக்கும் அவர், தன்னுடைய இருப்பிடத்தை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

அனைத்து ஆவணங்கள் இருந்து அவர்களை விமானத்தில் ஏற்றாமல் வெளிவிவகார துறை அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும், விமானத்தில் அருகில் வரவழைத்து இருமுறை அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், மீட்பு நடவடிக்கையின் ஒவ்வொரு நகர்வுகளையும் தற்போது தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து 950 பேர் மீட்கப்பட்டதாகவும், இது வரை 2650 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும் தங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் மீட்கப்படுவார்கள் என்று பிரதமர் மோரிசன் உறுதியளித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3jtA0NE