Breaking News

விக்டோரியாவில் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்ட Hume நகரம் : தடுப்பூசி நடவடிக்கைகளை வேகப்படுத்தியதால் இயல்பு நிலைக்கு திரும்பியது

மெல்போர்னின் வடமேற்கு ஊரக பகுதியான Hume நகரத்தில் வைரஸ் பாதிப்பு மிக அதிக அளவு இருந்த நிலையில் முடக்க நிலையால் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். தற்போதும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 200 ஆக பதிவாகி வருகிறது.

இந்நிலையில் அரசு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொண்ட நகரங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. அதன் அடிப்படையில் 75 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் வைரஸ் பாதிப்பு பெருமளவு கட்டுக்குள் வந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 15 வயதிற்கு மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழாக இருந்த நிலையில் கடந்த ஓரு மாதத்தில் சராசரியாக அக்டோபர் 3ஆம் தேதி கணக்கெடுப்பின்படி 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் Hume நகரத்தின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் தற்போது அது படிப்படியாக சீரடைந்து வருவதாகவும் இந் நகரத்தின் மேயர் Joseph Haweil தெரிவித்துள்ளார்.

City of Hume most affected by corona in Victoria. Vaccine activity returns to normal.வைரஸ் பாதிப்பில் முடக்க நிலை காரணமாக மிகவும் மோசமான பாதிப்புகளை Hume நகரம் சந்தித்ததாகவும், அதேநேரம் அத்தியாவசிய பணியாளர்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பணிக்குச் சென்ற நிலையில் அவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் மேயர் கூறியுள்ளார். அதே நேரத்தில் கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து வந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இரண்டாவது பெரிய இடமான விக்டோரியாவில் அவர்கள் தஞ்சம் புகுந்ததாகவும் மேயர் Joseph Haweil குறிப்பிட்டுள்ளார்.

City of Hume most affected by corona in Victoria. Vaccine activity returns to normal..இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் சவாலான பணியாக இருந்ததாகவும் மேயர் தெரிவித்துள்ளார். விக்டோரியாவில் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நகரங்களின் பட்டியலில் Hume உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே மக்கள் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டு உள்ளதாகவும், மக்கள் ஒத்துழைப்போடு அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மேயர் Joseph Haweil தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3iNmX94