Breaking News

ACT பிராந்தியத்தில் புதிதாக 25 நபர்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Covid has been confirmed for 25 newcomers in the ACT region.

சுமார் 3,637 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 25 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ACT பிராந்தியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 430 அதிகரித்துள்ளது.

Covid has been confirmed for 25 newcomers in the ACT regionஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆக்ட் பிராந்திய முதல்வர் ஆண்ட்ரூ பார் மக்களின் ஒத்துழைப்பால் விரைவிலேயே பிராந்தியத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்ற சாதனையை எட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது 12 வயது கடந்த 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், சுமார் 67.7% பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

அக்டோபர் 11-ஆம் தேதி முதல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பேசியவர் அது போன்ற தளர்வுகள் உடனடியாக எதுவும் இப்பிராந்தியத்தில் கொடுக்கப் படுவதற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Covid has been confirmed for 25 newcomers in the ACT region..அடுத்த 5 நாட்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அக்டோபர் இறுதி வாரத்தில் தளர்வுகள் கொடுக்கப்படுவது தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சுட்டிக் காட்டிய பார் பொதுமக்கள் ஆர்வமுடன் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனைகளில் இருந்து தொற்று பரவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பச்சிளங் குழந்தைகளை பராமரிப்பவர்களுக்கு என்று தனி செயல்திட்டம் வகுக்கபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3AwfaCp