Breaking News

94வது ஆஸ்கர் விழா மேடையில் கிறிஸ் ராக்-கை கன்னத்தில் அறைந்த விவகாரம் : வில் ஸ்மித்தின் ஒட்டுமொத்த குணநலன்களும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக திரைத்துறையினர் கருத்து

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கியமான நட்சத்திரங்களின் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் வில் ஸ்மித். ஆஸ்கர் விழாவில் நடைபெற்ற சம்பவத்தை அடுத்து அவர் மீதான ஒட்டுமொத்த பிம்பத்தையும் மாற்றி எழுதும் சூழல் உருவாகி இருப்பதாகவும் இது அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Chris Rock-cheek slap on stage at 94th Oscars. Screenwriters say Will Smith's overall character is being misrepresented.சிறந்த நடிகருக்கான விருதினை 94வது ஆஸ்கர் விழாவில் பெறுவதற்காக தனது மனைவியுடன் வந்திருந்தார் வில் ஸ்மித். அலோபீஷியா என்ற நோய் மண்டலத்தை முற்றிலும் தாக்கும் நோய் காரணமாக தலைமுடி முழுவதையும் இழந்திருந்தார் அவரது மனைவி ஜடா ஸ்மித். இதனைக் குறிப்பிட்டு மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிரிஸ் ராக் பேசிய நிலையில் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் மேடைக்கு ஏறிச்சென்று கிரிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.

அதே நேரம் விருது பெற்ற பின்னர் தனது ஏற்புரையில் கண்ணீர் மல்க வில் ஸ்மித் மன்னிப்புக் கோரினார். இதனையடுத்து ஆஸ்கர் அகாடமி இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் எந்தவிதமான வன்முறையையும் ஆஸ்கர் மேடையில் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

Chris Rock-cheek slap on stage at 94th Oscars. Screenwriters say Will Smith's overall character is being misrepresented.,.இந்நிலையில் #OscarsSoWhite என்ற ஹேஷ்டேகை உருவாக்கிய April Reign கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் ஹாலிவுட்டில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக வில் ஸ்மித் உருவானதாகவும், தனது திரைப்படங்கள் மூலமாக பல்வேறு காலகட்டத்தில் தனது ஆளுமையை நிரூபித்த ஒரு நபர் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் காரணமாக அவர் மீதான ஒட்டுமொத்த பார்வையையும் எதிர்மறையாக மாற்றுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பொது வாழ்வை மிகவும் வெளிப்படையாக வைத்திருக்கும் வில் ஸ்மித் எந்தச்சூழலிலும் அதை மறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது இல்லை என்றும், ராப் பாடகராக அவர் இருந்த காலத்தில் எந்தவிதமான இழிவான வார்த்தைகளையும் தனது ஆப்பிள் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் வில் ஸ்மித் என்றும் கூறப்படுகிறது.

Chris Rock-cheek slap on stage at 94th Oscars. Screenwriters say Will Smith's overall character is being misrepresented,கருப்பினத்தவர்கள் இதுபோன்று வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற எண்ணம் இருக்குமேயானால் அதன் மூலமாக நிறவெறியை நிச்சயம் ஒழிக்க முடியாது என்று Dr Benice King கூறியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நபர் இதற்கு முன் யாருமே செய்திராத ஒரு செயலை செய்யும் போது அது குற்றமாக தான் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்கர் விழா சம்பவம் குறித்து வில் ஸ்மித் மீதான விமர்சனங்கள் அனைத்தும் அவரது 20 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக முடித்து வைக்கும் வகையில் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கிரிஸ் ராக்கை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த விவகாரம் முழுவதுமாக கருப்பினத்தவர் என்ற அடையாளத்தின் கீழ் பேசப்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் அதன் அடிப்படையிலேயே எழுப்பப்படுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் விர்ஜினியா பல்கலைக்கழகப் பேராசிரியர் A.D. Carson கூறியுள்ளார்.

இந்த விமர்சனங்கள் காரணமாக வில் ஸ்மித் மீதான எந்தவித புகழுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடாது என்றும் மேடையிலேயே மன்னிப்புக் கோரிய வில் ஸ்மித் அதற்குப் பிறகு தனது மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தை நிறவெறியோடு அணுகுவது தான் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் காரணமாக இருப்பதாகவும் A.D. Carson தெரிவித்துள்ளார்.

94-வது ஆஸ்கர் விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் இருந்துவரும் நிலையில் அதனை புறந்தள்ளிவிட்டு இந்த விவகாரத்தை பூதாகாரமாக ஆக்குவதாகவும் April Reign
குற்றம் சாட்டியுள்ளார்.

Link Source: https://ab.co/3JUKLDb