Breaking News

சீனா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை மீட்டெடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை தேவை என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

Chinese Foreign Minister Wang Yi has said that concrete action is needed to restore Sino-Australian relations

பசிபிக் பகுதிகளிலுள்ள 8 நாடுகளுக்கு சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சுற்றுப் பயணம் செய்து வருகிறார். குறிப்பிட்ட நாடுகளில் சீனாவுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

ஆனால் மொத்தம் 10 நாடுகள் சீனாவுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்துகொள்ள விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனது கடைசி நாள் பயணத்தை மேற்கொள்ள பப்பா நியூ கினியா மற்றும் டீமார் நாடுகளுக்கு அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார்.

Chinese Foreign Minister Wang Yi has said that concrete action is needed to restore Sino-Australian relations.அப்போது ஆஸ்திரேலியா ஊடகம் அவரிடம் கேள்விகளை எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர், குறிப்பிட்ட நாடுகள் சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள தற்போது விரும்பவில்லை. ஆனால் அவர்கள் சிந்தித்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளன. ஒரு சில நாடுகள் அடுத்தாண்டு ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன. தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா இடையேயான உறவு குறித்து பேசிய அவர், ஆஸ்திரேலியாவிலுள்ள அரசியல் சக்தி சீனாவை ஒரு போட்டியாகவும், அதன் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதுகிறது. இதுதான் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்ததற்கு காரணம் என்றார்.

மேலும், தன்னியக்க மனநிலையை விட்டுவிட்டு உறுதியான செயல்கள் மூலம் இருநாடுகளும் தனக்கு இடையேயான உறவை மிட்டெடுக்கலாம் என்று சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.