Breaking News

கரியமில வாய்வு உமிழ்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், எதிர்வரும் நாட்களில் பருவநிலை மாற்றம், பஞ்சம், பட்டினியால் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Analysts warn that if carbon dioxide emissions are not controlled, the effects of climate change, famine and starvation will be uncontrollable in the coming days.

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள மவுனா லோவா என்கிற பகுதியில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சூழலியல் ஆர்வலர்கள், கடந்த மே மாதத்தில் மட்டும் உலகளவில் இருந்து கரியமில வாயு வெளியேற்றம் அதிகப்படியாக பதிவாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இதேநிலை அதிகரித்தால் மக்கள் பலரும் சூரிய வெப்பத்தால் சுட்டு உயிரிழக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கடந்தாண்டை விட கரியமில வாயுவின் வெளியேற்றம் 1.9 பி.பி.எம்-ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு கொரோனாவால் உலகமே முடங்கும் சூழல் ஏற்பட்டது. அதனால் கரியமில வாயு குறைந்தளவில் பதிவானது.

ஒவ்வொரு ஆண்டும் பூமியில் இருந்து 10 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேறி வருகிறது. இதன்காரணமாக உலகம் கடுமையான ஒரு சூழலை எதிர்நோக்கி காத்துள்ளது. உடனடியாக இந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஹவாய் கூட்டத்தில் வலியுறுத்தினர்.