Breaking News

டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள், வன்முறையை தூண்டும் மாதயிதழ்களை ஆட்சியாளர்கள் தங்களுடைய மாநிலங்களில் தடை செய்ய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

President Joe Biden has demanded that the regime ban in their states weapons and provocative magazines that are capable of carrying out attacks following the Texas school shooting.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டில் தொடர்ச்சியான பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறித்து கவலை தெரிவித்தார். மேலும் வன்முறைய தூண்டும் மாத இதழ்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும், அதற்கு மாநில ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும், அமெரிக்கா காங்கிரஸ் மூலம் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு கடும் சட்டங்களை பிறப்பிக் தான் முயன்றதாகவும், ஆனால் கடந்த காலங்களில் அது நிறைவேறவில்லை என்றார். நாட்டுக்கான பங்களிப்பை ஒவ்வொருவரும் சரியாக செய்ய வேண்டிய நேரமிது. நாம் இழந்த குழந்தைகளுக்காக, நாம் காப்பாற்ற வேண்டிய குழந்தைகளுக்காக, நாம் நேசிக்கும் இந்த தேசத்துக்காக செயல்பட வேண்டிய நேரம் இது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த குடியரசு கட்சியினர் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை பொதுமக்கள் சாதாரணமாக பயன்படுத்த அனுமதி வழங்கினர். அதை தொடர்ந்து தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தன. ஏ.கே- 47, ஏ.ஆர். 15-எஸ் போன்ற ஆயுதங்களை தடை செய்யப்பட வேண்டும் என்றார்.

அதிபர் ஜோ பைடனின் பேச்சுக்கு தேசிய துப்பாக்கி சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாக்கும் திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்வது என்பது முறையான தீர்வு கிடையாது. இந்த நாட்டுக்கு சரியான தலைமை வேண்டும், சரியான தலைமைத்துவம் வேண்டும், அதுதான் அமெரிக்காவை காப்பாற்றும் என்கிற கருத்தை வெளியிட்டுள்ளது.