Breaking News

தாஸ்மானியாவில் எல்லைகள் திறப்புக்கு பின் கோவிட் பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன ? பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை

What to do in case of Covid damage after opening of borders in Tasmania. Safety guidelines issued by the Department of Health.

இன்னும் மூன்று வாரங்களில் தாஸ்மானியா எல்லைகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதன் பின்னர் கோவிட் பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பை கையாளுவது தொடர்பான விவரங்கள் மற்றும் அரசின் திட்டங்களை ப்ரிமீயர் Peter Gutwein வெளியிட்டுள்ளார்.

What to do in case of Covid damage after opening of borders in Tasmania. Safety guidelines issued by the Department of Healthதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தனிமைப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான சூழலை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உடன் வசிப்போர் யாரேனும் அறிகுறிகளுடன் இருந்தால் அவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதன் அடிப்படையில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தொடரும் பட்சத்தில் தனிமைப்படுத்துதல் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்றும், நேரடி தொடர்பில் இல்லாதவர்களை தொற்றுப் பரவல் தொடர்பு உடையவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் ப்ரீமியர்
Peter Gutwein கூறியுள்ளார்.

What to do in case of Covid damage after opening of borders in Tasmania. Safety guidelines issued by theமருத்துவமனைகள் கடைகள் உள்ளிட்ட இடங்களில் இயல்பான தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் அறிகுறிகள் இருந்தால் 3 அல்லது 5 நாட்களுக்குள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்பில் இருந்தவர்கள் ஒரே இடத்தில் இருக்க நேரிட்டால் அவர்கள் முழு பாதுகாப்பு கவசமாக PPE கிட் அணிய வேண்டும் என்றும், உரிய தனிமனித இடைவெளி பின்பற்றி மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் நேரடி சந்திப்புகளில் 15 நிமிடத்திற்கும் மேலாக இருந்தவர்களுக்கு அடுத்த 72 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தொடர்பாக உறுதி செய்யப் படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பொது சுகாதார ஊழியர்கள் PPE கிட் அணிவதால் தொற்றுப் பரவல் தொடர்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.

What to do in case of Covid damage after opening of borders in Tasmania. Safety guidelines issued by the Department of Health,தடுப்பூசி செலுத்து இருந்தாலும் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், 12 முதல் 13 நாட்களில் அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் கட்டாயம் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தேவைப்பட்டால் உரிய நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் பிரீமியர் கூறியுள்ளார்.

உணவகங்கள் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்காத வண்ணம் வாடிக்கையாளர்களில் யாருக்கேனும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரீமியர் Peter Gutwein தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3xxj79Y