Breaking News

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை : 6 கண்காணிப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மதுரையில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்திய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் நோயாளிகளை அனுமதிக்க மறுப்பது தொடர்பாகவும் அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக 6 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Action against private hospitals for charging extra for corona treatment Government of Tamil Nadu orders setting up of 6 monitoring committeesஇதனிடையே தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பலனாக பல்வேறு பகுதிகளில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்றுவந்த 478 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர் கடந்த சில தினங்களில் ஒப்பிடும்போது உயிரிழப்பு எண்ணிக்கை சராசரியாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தற்போது பயன்பாட்டுக்கு தயாராக உள்ளன. நோயாளிகளின் வருகை குறைந்துள்ளதால் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்து உள்ளனர்.

Link Source: https://bit.ly/3vHEXWL