Breaking News

மியான்மரில் வெளிநாடுகளின் தலையீடு இன்றி தங்களது சதித்திட்டங்களை ராணுவத்தினர் பின்வாங்க வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது.

China has warned the military to withdraw its conspiracies in Myanmar without foreign intervention.

மியான்மரில் நடைபெற்ற கொடூர ராணுவ தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா அரசு கண்டனம் தெரிவித்த அதே நாளிலேயே சீனாவும் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சீன வெளியுறவுத்துறை அதிகாரி Wang Xining, ராணுவ சதித்திட்டங்களுக்கு எதிராக சீனா மிகவும் உறுதியாக உள்ளதாக கூறினார்.

மியான்மரோடு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நெருக்கமாக இருக்கும் சீனா அந்நாட்டு அரசின் உத்திகளையும் ஜனநாயகப்பூர்வமற்ற செயல்களையும் கண்டு வியப்படைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ம் தேதி ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி தனது கட்டுபாட்டில் கொண்டு வந்ததில் இருந்து நடைற்ற வன்முறை, கலவரத்தில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகள் மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ராணுவ சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு ராஜ்ஜிய ரீதியான சுமூக நிலை விரைவில் எட்டப்படும் என்று நம்புவதாக Wang Xining தெரிவித்துள்ளார்.