Breaking News

பிரதமர் ஸ்காட் மோரிசன் உடனான சந்திப்பு ஒத்திவைப்பு : ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்

Postponement of meeting with Prime Minister Scott Morrison The victim woman who expressed dissatisfaction on Twitter

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சர் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நபர் ஒருவரால் Brittany Higgins பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கவும் பாராளுமன்ற அலுவல் சூழலில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் உடனான இருநபர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்து. இந்நிலையில் அந்த சந்திப்பு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வருவதால் தனது அதிருப்தியை Brittany Higgins ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரம், தான் தொடர்ந்து நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும், பாதிக்கப்படுவோரும் மக்களும் முன்வந்து தங்கள் பிரச்சனைகளை பேசாத வரையில் தீர்வுகாணுவது சிக்கலான ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு மாத காலத்தில் தேசிய போராட்டங்கள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தற்போது நடவடிக்கைக்கான நேரம் என்றும் Brittany Higgins கூறியுள்ள நிலையில், சந்திப்பு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Postponement of meeting with Prime Minister Scott Morrison The victim woman who expressed dissatisfaction on Twitter 1அது மிகவும் முக்கியமான சந்திப்பு, அதற்காக தான் காத்திருப்பதாகவும், அதனை தொடர்ந்து பரிசீலித்து வருவதால் விரைவில் சந்திப்பு நடைபெறும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக வெளிவருவதற்கு Brittany Higgins அது தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறார் என்றும், ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள், அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோரால் தொடர்ந்து அத்துமீறல் நடப்பதாக Brittany Higgins கூறியுள்ளார்.

விரைவில் பணியிட சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பாதிக்கப்பட்ட Brittany Higgins.