Breaking News

கோவிட் 19 : ஆஸ்திரேலியாவில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

covid 19 Union Cabinet approves expedited vaccination of over 50s in Australia

மே 3ம் தேதியில் இருந்து தடுப்பூசி திட்டங்களை மாற்றியமைத்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை விரைந்து முடிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 3 முதல் ஜிபி சுவாச மருத்துவமனைகளிலும், மே 17 முதல் ஜிபி பொது மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவது தொடங்கப்படும் என்றும், மறுகட்டமைப்பு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டங்கள் குறிப்பிட்ட நாறில்ற இருந்து அமலுக்கு வரும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

மிக அதிக பாதிப்புள்ள நாடுகளில் இருந்து திரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான நெறிமுறைகளை கடுமையாக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமலுக்கு வரும் புதிய திட்டத்தில் வயது அடிப்படையிலான பிரிவில் அஸ்ட்ராசெனகா முதலாவதாகவும், இரண்டாவதாக 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியும் போட திட்டமிடப்படுள்ளது.

covid 19 Union Cabinet approves expedited vaccination of over 50s in Australia 1அஸ்ட்ராசெனகா மீதான ரத்தம் உறைதல் புகார்களை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர் பரிந்துரை செய்யப்படுவதாகவும் ஆஸ்திரேலிய நோய் எதிர்ப்பு தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய தடுப்பூசி திட்டங்களில் மருந்து இருப்பு மற்றும் மற்ற நாடுகளில் இருந்து வரவழைப்பதில் ஏற்படும் தாமதங்களை களைய வேண்டும் என்றும், விரைந்து செயல்படுத்துமாறும் மாகாண அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

மோசமான நிலையில் உள்ள முன் கள பணியாளர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட பாதிப்பு உடைய நபர்கள் கண்டறியப்பட்டு முதற்கட்ட திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாவும், இதில் முக்கியத்துவத்தின் அடிப்படையில் முன்னுரிமை மாற்றி அமைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் Brendan Murphy கூறியுள்ளார்.

பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை என்றும், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களை முழுவதுமாக தடை செய்யலாம் என்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் ப்ரீமியர் Mark McGowan தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

link source: https://bit.ly/3gDuWVL