Breaking News

விமானங்களில் வந்தவர்களை ஒன்றாக தங்கவைக்கும் முடிவில் மாற்றம்..!

Change in the decision to keep those who came on planes together

குயின்ஸ்லாந்து விமானப் பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஒரே இடத்தில் பயணிகளை தங்கவைக்கும் முடிவை சுகாதாரத்துறை அதிகாரிகள் திரும்பப் பெற்றுள்ளனர்.

Change in the decision to keep those who came on planes together,நியூகாஸ்ட்லில் இருந்து குயின்ஸ்லாந்துக்கு விமானத்தில் வந்த ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு ஒமைக்ரான் இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பயணியுடன் பயணித்தவர்களையும், அதேநேரத்தில் தரையிறங்கிய மற்றொரு விமானப் பயணிகளையும் ஒருசேர தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள் முயன்றனர்.

ஆனால் அந்த நடவடிக்கையை கைவிடும்படி சுகாதாரத்துறை அமைச்சர் யவ்விட்டே டாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரண்டு விமானப் பயணிகளையும் ஒன்றாக இருக்கவைத்தால் கொரோனா பரவும் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயணியுடன் பயணித்தவர்கள், முன் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்தவர்கள் ஆகியோரை மட்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்மூலம் நெகட்டிவ் முடிவுகளை பெற்றவர்கள் வீட்டுக்கு திரும்பலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3e07jEn