Breaking News

விக்டோரியா மாகாண ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த விவகாரம் : பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்ததால் தனிமைப்படுத்துதலில் இருந்து தளர்வு

Victorian Premier Daniel Andrews affair with infected person. Relaxation from isolation due to test negative

விக்டோரியா மாகாண ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தனது கிறிஸ்துமஸ் விடுமுறையை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் பங்கேற்றிருந்த டேனியல் ஆண்ட்ரூஸ், ஏற்கனவே தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரீமிய டேனியல் ஆண்ட்ரூஸ், தன்னை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

கோவிட் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதால் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Victorian Premier Daniel Andrews affair with infected person. Relaxation from isolation due to test negative.ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் உடன் சமூகப் பரவல் மூலமாக அறிகுறிகள் தென்பட்ட 19 பேர் கண்டறியப்பட்டு அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுக்காக காத்திருக்கும் 19 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வந்ததன் காரணமாக பல்வேறு நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளதாகவும் இதனை முறையாக பின்பற்றுவதே உரிய வழி என்றும் பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விக்டோரியாவில் அதிகபட்சமாக ஒரு நாள் தொற்று பாதிப்பு 1622 ஆக பதிவாகி உள்ளது. திரிபு வகை வைரஸ் ஆன ஒமைக்ரான் பாதிப்பு மெல்பனில் தென்படத் தொடங்கியுள்ளது. இதுவரை 30 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, விக்டோரியாவில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் சதவிகிதம் 91.97 ஆகவும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவிகிதம் 93.65 ஆகவும் உள்ளது.

Link Source: https://ab.co/3dZkDJ1