Breaking News

Northern Territory க்கு வருவோருக்கு மேற்கொள்ளப்படும் ஆன்டிஜென் பரிசோதனைகள் நிறுத்தம் : மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

ஞாயிறன்று ஒரே நாளில் தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்ததாகவும், இது முந்தைய நாளில் 111 ஆக இருந்ததாகவும் முதலமைச்சர் Michael Gunner கூறியுள்ளார். இந்நிலையில் மாகாணங்களுக்கு உள்ளேயும், வெளிநாட்டு பயணிகளுக்குமான ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை தற்காலிக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் 10 பேர் தற்போது ஆக்சிஜன் பெற்று வருவதாகவும், அதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் சற்று குறைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய நாளில் 849 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 150 ஆக உள்ளதாக முதலமைச்சர் Michael Gunner தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 2.4 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Cessation of antigen testing of visitors to the Northern Territory. Rise of hospitalized patients.தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாகவும், உயிரிழப்பு மற்றும் தீவிர சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தலைமை சுகாதார அதிகாரி Hugh Heggie கூறியுள்ளார். இது ஒரு நம்பிக்கை தரும் நடவடிக்கை என்றும், இதுவே மாநிலத்தின் அனைத்து மக்களுக்குமான நம்பிக்கை என்றும் Hugh Heggie கூறியுள்ளார்.

முன்னதாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை 3 முறை மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நிலையில் அதனை நிறுத்துவதாகவும், மாநிலங்களுக்க உள்ளேயும், வெளிநாட்டை சேர்ந்த பயணிகளுக்கு விமான நிலையில் வந்திறங்கிய பின்னர் மேற்கொள்ளப்படும் ஆன்டிஜென் பரிசோதனை தற்போது தேவையில்லை என்றும் முதலமைச்சர் Michael Gunner தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், ரிமோட் பகுதிகளில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Ampilatwatja, Milingimbi பகுதிகளில் சமுகப்பரவல் உள்ளதாகவும் அங்கு தொற்று பாதிப்பு 66 ஆக பதிவாகி உள்ள நிலையில் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் 5 ஆயிரம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் Michael Gunner தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3uflkre