Breaking News

உக்ரைன் விவகாரத்தில் ஆஸ்திரேலியா ஆதரவளிப்பது போர் மூளுவதற்கான வழி : ஆஸ்திரேலியாவுக்கான ரஷ்ய தூதர் Alexey Pavlovsky தகவல்

Canberra வில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தூதர் Alexey Pavlovsky, ஆஸ்திரேலியா இந்த விவகாரத்தில் அளித்து வரும் ஆதரவு போர் மூளுவதற்கான வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவை மேற்கத்திய நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் உக்ரைனுக்கு தனது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ரஷ்ய தூதர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேநேரத்தில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்த கருத்துக்கள் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆனது என்றும், அவற்றை அவர் கட்டாயம் திரும்பப் பெற வேண்டும் என்றும் தூதர் Alexey Pavlovsky கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் தங்களது ஆதரவை வெறும் வாய் வார்த்தையாக தெரிவிப்பது, துருப்புக்களை அனுப்புவது மற்றும் எல்லைகளில் படைகளை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியான போக்கு அல்ல என்றும் Alexey Pavlovsky தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் போரை தூண்டுவதற்கான நடவடிக்கைகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Australia's support for Ukraine could lead to war. Russian Ambassador to Australia Alexey Pavlovsky.உக்ரைன் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது படைகள் அச்சமூட்டுவதற்காக அல்ல என்றும், வெறும் எச்சரிக்கை காரணங்களுக்காகவே நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் Alexey Pavlovsky கூறியுள்ளார். ஆதரவு தருவதாக கூறி தேவையற்ற போர் பதற்றத்தை மேற்குலக நாடுகள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் Alexey Pavlovsky கேட்டுக் கொண்டுள்ளார். பேட்மேன் vs ஜோக்கர் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கையை ஆஸ்திரேலிய மக்களே வெறும் காமிக் புத்தகத்தை படிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உணர்வார்கள் என்றும் Alexey Pavlovsky விமர்சித்துள்ளார்.

அதேநேரத்தில் உக்ரைனில் இருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் விளக்கு குடும்பங்களைச் சார்ந்தவர்கள் கடந்த சில நாட்களில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட தாகவும், யாரும் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லையில் படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் Dr Pavlovsky தெரிவித்துள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன.

Link Source: https://bit.ly/34kwr7i