Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தொற்றுப் பரவல் மற்றும் உயிரிழப்பு நிலவரம் : ஒரே நாளில் 10 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று உறுதி – 20 பேர் உயிரிழப்பு

விக்டோரியா மாகாணத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 ஆயிரத்து 539 ஆக பதிவாகி உள்ளது. இதில் பிசிஆர் பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 4,479 ஆகவும், ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 6,110 ஆகவும் உள்ளது. இந்நேரத்தில் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் உயிரிழந்தனர்.

தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. முந்தைய நாளில் 953 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அது 889 ஆகக் குறைந்துள்ளது. அறுபத்து ஒன்பது பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

Outbreaks and deaths in the Australian state of Victoria. 10,589 confirmed in a single day - 20 deaths.கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பதாகவும், அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் எண்ணிக்கையும் குறையத் தொடங்கி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது விக்டோரியா மாகாணத்தில் உள்ள சூழல் நம்பிக்கையான தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், வரும் நாட்களில் தொற்று பாதிப்பு குறையும் வகையிலானயான நடவடிக்கைகளை உரிய முறையில் மாகாண அரசு மேற்கொள்ளும் என்றும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார்.

ஜனவரி மாதத் தொடக்கத்தில் 2 லட்சத்து 53 ஆயிரம் ஆக இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கி இருப்பதாகவும், பெரும்பாலானவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு முன்னுரிமை அளித்து அதனை செய்ய விரும்புவதாகவும் இதன் காரணமாக வைரஸ் பாதிப்பு முடிவுகளை அறிந்து கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியா மாகாணத்தில் இதுவரை 38.1 சதவீதம் பேர் 3 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் அமைக்கிறான் வைரஸின் சிரிப்பு வகை வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் உரிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3GhhX58