Breaking News

ஆஸ்திரேலியாவின் முதல் ஸ்பேஸ் கமாண்டராக கேத்தரின் ராபர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Catherine Roberts has been appointed Australia's first space commander.

ராயல் ஆஸ்திரேலியன் விமானப்படையில் ஏர் வைஸ் மார்ஷளாக இருப்பவர் கேத்தரின் ராபர்ட்ஸ். சுமார் 35 வருடங்களுக்கு மேலாக ராயல் விமானப்படையில் பணியாற்றும் இவர், தொடக்கத்தில் பொறியாளராகவும், பிறகு தன்னுடைய கடின உழைப்பின் மூலம் விமான படையின் முக்கிய பிரிவுக்கு தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.

சிறுவயது முதலே ,நிலவில் முதல் முதலாக கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை தன்னுடைய முன்மாதிரியாக கொண்டு உள்ள கேத்தரின் ராபர்ட்ஸ் விமானப்படையின் பல்வேறு முக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

புதிய வான்வெளி படைபிரிவு உருவாக்கம் பற்றி கருத்து தெரிவித்த விமானப்படை ஏர் மார்ஷல் Mel Hupfeld, இந்த படைபிரிவு மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், என்றும் ஆனால் இந்த இடைவெளியை குறைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் வான்வெளி கமாண்டராக கேத்தரின் ராபர்ட்ஸ் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3evci0T