Breaking News

ஆஸ்திரேலியாவில் 2050 க்குள் கார்பன் வாயு வெளயேற்றம் பூஜ்ஜியமாக இருக்கும் : புதிய பருவநிலை திட்டத்தின் கீழ் உறுதி அளிப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் பேச்சு

Carbon emissions in Australia to be zero by 2050. PM Scott Morrison pledges commitment under new climate plan,

உலக பருவநிலை மாற்ற மாநாட்டை ஒட்டி பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வரும் உறுதிமொழியன் வரிசையில் ஆஸ்திரேலியா 2050 -க்குள் கார்பன் வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20250 பூஜ்ஜிய இலக்கை அடைவதற்காக 2030 ஆண்டில் குறைந்தபட்ச வாயு வெளியேற்ற தொழில்நுட்பத்திற்காக 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

கார்பன்களை வரிசைப்படுத்தி அவற்றை மண்ணில் சேகரிக்கும் அத்திட்டத்தை தொடர்வது மற்றும் குறைந்தபட்ச சக்திகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சோலார் மூலமாக ஒரு மெகாவாட் மின்சாரத்தை 15 டாலர் என்ற அளவில் அரசு தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Carbon emissions in Australia to be zero by 2050. PM Scott Morrison pledges commitment under new climate planபுதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்குவதன் மூலமாக ஹைட்ரஜன் இல்லாத ஒரு சூழலை உருவாக்க முடியும் என்றும், கார்பன், ஹைட்ரஜன் போன்ற வாயு
வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது நமது இலக்கை நோக்கி பயணிப்பதற்கான சரியான வழி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் மூலமாக 85 சதவீதம் அளவிற்கு வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மீதமுள்ள 15 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டில் இருந்து வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்பதும், 2050ஆம் ஆண்டு இலக்கு என்பது எழுதப்பட்ட சட்டம் அல்ல என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் 2050ஆம் ஆண்டு இலக்கு தொடர்பான தெளிவான முடிவுகளை எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய தலைவர்கள் இதுவரை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

Link Source: https://ab.co/3EjFVfM