Breaking News

Brazil-ன் Yanomami பழங்குடி மக்களிடையே Coronavirus கட்டுப்பாடின்றி பரவி வருகிறது !

Yanomami பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 335ஆக இருந்த கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, அக்டோபர் மாதம் 1202 ஆக உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Brazil-ல் Yanomami இன மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக வியாழனன்று வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Amazon காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை போன்றே Yanomami மக்களிடமும் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆகஸ்ட் மாதம் 335ஆக இருந்த கொரோனா நோய் தொற்று அக்டோபர் மாதத்தில் 1202ஆக அதிகரித்துள்ளது.

அதில் 23 பேர், தொற்றினால் உயிரிழந்துள்ளதாக coalition of Indigenous rights groups-ன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பழங்குடியின மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவது சாத்தியப்படாத ஒன்றாகும்.

மேலும் 10,000 Yanomami மற்றும் Ye’kuana மக்களுக்கு வைரஸ் நோய் தொற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அந்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அங்கு நிலைமை கைமீறி சென்று விட்டதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Brazil-ன் சுகாதார துறை அளித்த அறிக்கையை விட ஆய்வாளர்களின் அறிக்கையில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதில் 1,050 நோய் தொற்று மற்றும் 9 மரணங்களடங்கும். 27,000 மக்கள் வாழும் பகுதியாகும்.

இங்கு முதல் கொரோனா தொற்று இறப்பானது ஏப்ரல் மாதத்தில் பதிவிடப்பட்டது. இந்த தொற்று பாதிப்பிற்கு தங்க சுரங்க உரிமையாளர்கள் மற்றும் far-right President Jair Bolsonaro தான் காரணம் என்று பழங்குடியினர் உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாட்டில் 39,647 பழங்குடியின மக்கள் corona virus தொற்றிற்கு ஆளாகியுள்ளனர் என்றும் அதில் 877 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் Brazil ன் பழங்குடியின அமைப்புகள் தெரிவித்துள்ளது.

சுமார் 167,000 corona virus இறப்புகளுடன், Brazil , America-விற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 800,000க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் சுமார் 300 குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

Brazil-ன் Amazon காட்டுப்பகுதிகளில் வெளியுலகோடு தொடர்பில்லாத சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக பழங்குடியின rights group Survival International தெரிவித்துள்ளது.

முகங்களில் வண்ணங்கள் பூசிக்கொள்ளும் yanomami இனத்தவர்கள் 27,000க்கும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள், 1970களில் அம்மை மற்றும் மலேரியா நோயினால் பேரழிவிற்கு ஆளான இவர்கள், 20 ஆம் நூற்றாண்டு வரை வெளியுலகோடு தொடர்பில்லாமல் இருந்தனர்.