Breaking News

ஆப்ரிக்காவில் 2 மில்லியன் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. மேலும் தொற்றுவிகிதம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து !

ஆப்ரிக்காவில் நோய் தொற்று உள்ளவர்கள் மற்றும் இறந்தவர்களின் விகிதம் சரியாக பதிவு செய்ய தவறி விட்டார்கள் என்பதால் கவலை அளிக்கிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சோதனை விகிதம் 1.3 பில்லியனாக கண்டறியப்பட்டுள்ளது , உலகளவில் இந்த கண்டத்தில் தான் மிகக்குறைவு என்று அறிவித்துள்ளனர்.
ஆப்ரிக்கா தொழிற்சங்க சுகாதார அமைப்பு கூறுவது என்னவென்றால் 2,013,388 நோய் தொற்று உள்ளது என்றும் உலகளவில் இதுவே மிக குறைவு என்று தெரிவிக்கிறது.

குறைந்தபட்சம் 48,000 பேர் இறந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.17 சதவீதம் மக்களை கொண்டது ஆப்ரிக்கா. 1.3 billion மக்கள் ஆப்ரிக்காவில் உள்ளனர். 10,000 மக்கள் தொகையில் 15 பேருக்கு நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த அளவில் கோரோனா தொற்றின் அலை உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து விதமான வசதிகள் கூடிய மருத்துவமனைகள் மற்றும் பிராணவாயு , செயற்கை சுவாசம் கொடுக்க கூடிய வசதிகள் உள்ள மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே Ebola நோய் தாக்கம் வந்ததை எதிர் கொண்டு இருக்கிறோம், ஆதலால் மருத்துவ அனுபவம் உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 400 பேருக்கு தான் நோய் தொற்று இருந்தது.இப்பொழுது தெற்கு ஆப்ரிக்காவில் 750,000 பேருக்கு நோய் தொற்று உள்ளது என்றும் 2.71 சதவீதம் பேர் மரண மடைந்துள்ளனர்.

Sudan-ல் 7.81 சதவீதம் இறப்பு விகிதம் காட்டுகிறது. Chad-ல் 6.28 சதவீதமும் Egypt-ல் 5.82 சதவீதம் ஆகும்.குறைந்த இறப்பு விகிதத்தக்கு காரணம் இளம் மக்கள் தொகையே என்று கூறியுள்ளார்.

ஆரம்ப கட்டத்திலேயே எல்லாவித பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன .அதே சமயம் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் ,சமூக இடைவேளையை கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்று Africa’s CDC Director John Nkengason கூறியுள்ளார்.