Breaking News

கொரோனா வைரஸ் பரவல் எப்பொழுது தொடங்கியது என்று Melbourne கழிவுநீரில் கண்டுபிடிக்கப்பட்டது

விக்டோரியா நகரத்தில் ஒருவருக்கு நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. Melbourne கழிவுநீர் மாதிரிகளில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனா பரவல் முன்பே இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த மாநிலத்தில் கடந்த 22 நாட்களாக நோய் தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.

நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்களை நோய் தாக்கம் அதிகமாக தாக்குகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார்.

நோய் தொற்று உள்ளது என்று கண்டறியப்பட்ட வயதான பெண்மணிக்கு தற்போது நோய் தொற்று இல்லை என்று அறிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் புதன் வரை Melbourne நகரத்தில் உள்ள Altonaவில் வசிக்கும் மற்றும் விருந்தினர்களுக்கு சிறியு அறிகுறிகள் தென்பட்டால் கூட பரிசோதனை செய்ய வலியுறுத்துகின்றனர்.

புதன்கிழமை அன்று Altonaவில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இது முற்றிலும் எதிர்பாராத தகவல் என்று கருதப்படுகிறது.Altona, Altona Meadows, Laverton, Point cook and Sanctuary lakes ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அன்று தெற்கு ஆஸ்திரேலியாவில் அரசு எல்லை கட்டுப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று Mr. Foley அறிவித்தார்.
Adelaide ல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரவிலிருந்து ஐந்து மாநிலத்தின் எல்லைகள் மூடுதல் போன்றவை கடைப்பிடிக்கப்படுகிறது.

தற்போது மேலும் 25 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.எல்லைகள் திறப்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அறிவித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று 24 மணி நேரத்திற்குள் 8 மணி அளவில் உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 16,000 பேருக்கு பரிசோதனை செய்த பின் 10 பேருக்கு நோய் தொற்று உள்ளது என்று உறுதி சொய்யப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களாக NSW ஒரு புதிய நோய் தொற்று கூட கண்டறியப்படவில்லை.எவருக்கேனும் காய்ச்சல் ,சளி, தும்மல், இருமல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்து கொள்ளும்படி மக்களுக்கு அறிவுரை கூறினார். NSW சுகாதாரத்துறை Dr. Jan Fizzell.

தெற்கு ஆஸ்திரேலியாவில் எல்லை மூடியதை தொடர்ந்து முட்டாள்தனம் என்று கூறிவருகிறார். அனுமதி பெற்று தான் தெற்கு ஆஸ்திரேலியாவில் நுழைய முடியும் என்பது மிகவும் முட்டாள்தனமான ஒன்று என்று கருத்து தெரிவித்தார். இதுவரை பள்ளிகள் திறப்பு பற்றி ஒரு திடமான முடிவு எடுக்கப்படவில்லை.