Breaking News

காவல் அதிகாரிகளை தாக்கியதாக பிளாக்கேட் ஆஸ்திரேலியா அமைப்பினர் கைது..!!

காவல் அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட 40 பேரில், 7 பேர் மீது வழக்குப்பதிவு.

Blackgate Australia arrested for assaulting police officers

காவலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதால் போராட்டக்கார்களை கைது செய்ததாக காவல்துறை விளக்கம்.

காவல்துறையின் நடவடிகைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடி வரும் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அமைப்புகளில் முக்கியமானது பிளாகாய்டு ஆஸ்திரேலியா. வரும் 27-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சிட்னியில் இவ்வமைப்பு போராட்டத்தை மேற்கொள்ள இருந்தது.

இதற்காக பிளாக்கேட் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பலரும் சிட்னியிலுள்ள கோலோ என்கிற இடத்தில் முகாமிட்டு இருந்தனர். கடந்த சில நாட்களாக கூடாராம் அமைத்து அவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், துப்பாக்கி மற்றும் கவச உடைகளுடன் உட்புகுந்த இரண்டு பேர், அமைப்பைச் சேர்ந்தவர்களை விசாரிக்க முனைந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபர்களை அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் 40 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக பிளாக்கேட் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரெக் ரோல்ஸ் என்பவர் ஊடகங்களிடம் பேசுகையில், விக்பாராஸ்டஸ் என்கிற நிறுவனம் சில தனியார் பாதுகாவலர்களை நியமித்து எங்களை உளவு பார்த்து வருவதாகவும். எங்களுடைய நடவடிக்கையை கண்காணிக்கவே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் இங்கு வந்தனர்.

அதை தட்டிக்கேட்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எங்கள் அமைப்பச் சேர்ந்தவர்களை, காவல்துறை உதவியுடன் கைது செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட 40 பேர், 30 நபர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் மீதமுள்ள 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கண்டுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் சிட்னியில் தாங்கள் மேற்கொள்ளவுள்ள போராட்டத்தை தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிளாக்கேட் அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு பருவநிலை மாற்றம் குறித்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை களைய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. அதை தடுக்கும் விதமாக அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், எங்களுடைய போராட்டம் தொடரும் என பிளாக்கேட் ஆஸ்திரேலியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.