Breaking News

அவோகெடோ விளைச்சலால் விழிப்பிதுங்கி நிற்கும் ஆஸ்திரேலியா..!!

அவோகெடோ பழத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதை அடுத்து, விவசாயிகள் நலம்பெறும் விதமாக அதை ஆஸ்திரேலியர்கள் அதிகம் வாங்கி சாப்பிடுமாறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Australia awake with avocado yield,

நாடு முழுவதும் அவோகெடோ பழம் தேவைக்கும் அதிகமாக விற்பனையில் உள்ளன. விற்பனையாளர்கள் பலர் அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதை தடுக்கும் விதமாக அவோகெடோவை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

Australia awake with avocado yield.அவோகெடாவை விநியோகம் செய்யும் விற்பனையாளர்கள் ஒருவரான ஜான் டையஸ் இதுகுறித்து பேசும்போது, உலகளவில் அவோகெடா பழத்தை அதிகம் சாப்பிடுபவர்களில் ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் உள்ளனர். கடந்தாண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தில் நபர் ஒருவர் 4 கிலோ வரை அவோகெடா பழங்களை சாப்பிட்டுள்ளார். தற்போது நபர் ஒருவர் 5 முதல் 6 கிலோ அவோகெடோ பழங்களை சாப்பிட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தி தர முடியும்.

 

Australia awake with avocado yieldஆஸ்திரேலியர்கள் நினைத்தால் அவோகெடோவை எப்படியும் சாப்பிட முடியும். பொறித்து, அவித்து, ஆவியில் வேக வைத்து என பலவகையில் அதை சாப்பிடக் கூடியவர்கள். உடல் எடையை கூட்டும் கூலுட்டன் இல்லா பழம் என்பதால், உடல்நலனுக்கு நன்மை செய்வதில் அவோகெடோவுக்கு நிகர் அதுமட்டுமே என்று ஜான் டையஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு ஆஸ்திரேலிய ஊடகங்களில் இப்போதே அவோகெடோவை குவியல் குவியலாக குப்பையில் கொட்டும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இதுமேலும் தொடராமல் இருக்கும் விதமாக ஆஸ்திரேலியர்கள் உதவி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளன.