Breaking News

லிபரல் கட்சியில் 30 ஆண்டு காலம் அங்கம் வகித்து முக்கிய பெண் அரசியல் தலைவராக திகழ்ந்த செனட்டர் சாம் மெக்மகான், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

Senator Sam McMahon, a prominent female political leader who has been a member of the Liberal Party for 30 years, has left the party.

ஆஸ்திரேலியாவின் பிரதமர் மோரீசன் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார். தற்போது சாம் மெக்மகான் கட்சியில் இருந்து விலகுவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவர் நாடாளுமன்றத்தில் சுயேட்ச்சையாக செயல்படுவார்.

தொடர்ந்து அவர் லிப்ரல் டெமோகிரேட்ஸ் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதை கடந்த வாரம் அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Senator Sam McMahon, a prominent female political leader who has been a member of the Liberal Party for 30 years, has left the partyஆஸ்திரேலியா நாட்டின் பெரும் பெண் அரசியல் தலைவராக திகழ்பவர் சாம் மெக்மகான். கத்ரீன் மாகாணத்தைச் சேர்ந்த இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடந்த தேர்தலில் தோற்றுப் போனார். அதனால் இவருக்கு லிப்ரல் கட்சி அடுத்த முறை நடைபெறும் தேர்தலுக்கு சீட் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கட்சியுடன் கருத்து வேறுபாட்டுடன் சாம் மெக்மகான் இருந்து வந்ததாகவும், முடிவில் அவர் கட்சியை விட்டே விலகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Link Source: https://ab.co/32HvMfz