Breaking News

ஆஸ்திரேலியாவின் Northern Territory பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலமாக முதல் தொற்றாளர் அடையாளம் : அடுத்த 72 மணி நேரத்திற்கு முடக்கநிலை அறிவித்து முதலமைச்சர் உத்தரவு

Australia's Northern Territory region first infected by social outbreak. CM orders declaration of paralysis for next 72 hours

Northern Territory -ல் சமூகப் பரவல் மூலமாக பிராந்தியத்தின் முதல் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். Katherine பகுதியில் 20 வயது இளைஞருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு 72 மணி நேர முடக்க நிலையை அறிவித்து முதலைமச்சர் Michael Gunner உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இளைஞருக்கு தொற்று பரவியதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தொற்று பாதித்த்இளைஞர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் Katherine மற்றும் Greater Darwin பகுதிகளில் நேரம் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து Katherine பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவு 12 மணி முதல் 3 நாட்களுக்கு முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று பிராந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சேவை, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, அத்தியாவசிய துறையில் பணியாற்றுவோர், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு ஆகிய 5 காரணங்களுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும்.

Australia's Northern Territory region first infected by social outbreak. CM orders declaration of paralysis for next 72 hours.Greater Darwin மற்றும் அதன் ஊரக பகுதியான Palmerston-ல் அடுத்த 72 மணி நேரத்திற்கு முடக்க நிலையில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அத்தியாவசிய பணியாளர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான ஆவணங்களை வெளியில் வரும் போது காண்பிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று பிராந்திய அரசு எச்சரித்துள்ளது.

Katherine பகுதியில் 5 இடங்கள் தொற்று பாதிப்பு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்களுக்கு சென்று வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொற்று பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் Michael Gunner தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3bJ5Jph