Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் 4 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் : சம்பவம் தொடர்பாக 36 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

4-year-old girl abducted in Western Australia. A 36-year-old man has been arrested in connection with the incident

மேற்கு ஆஸ்திரேலியாவின் Carnarvon பகுதியில் உள்ள Blowholes போடப்பட்டிருந்த முகமில் கூடாரம் ஒன்றில் இருந்த 4 வயது சிறுமி Cleo Smith கடந்த அக்டோபர் 16ம் தேதி காணாமல் போனார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் Ellie Smith, stepdad Jake Gliddon போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் சிறுமி தானாக கூடாரத்தை விட்டு வெளியேறவில்லை என தாய் அச்சம் தெரிவித்ததை அடுத்து போலிசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர்.

தலைநகர் பெர்த்-ல் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Carnarvon பகுதிக்கு சுமார் 100 அதிகாரி கொண்ட காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். மக்கள் தொகை குறைவான பகுதிகளில் உளவு விமானங்கள் மூலமாகவும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

4-year-old girl abducted in Western Australia. A 36-year-old man has been arrested in connection with the incident.சிறுமி இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்தால் 7.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் அறிவித்தது. இந்நிலையில் தகவல் ஒன்றின் அடிப்படையில் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்திய போலீசார் அறை ஒன்றில் இருந்த சிறுமி Cleo Smith -ஐ மீட்டனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி Cleo Smith தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மருத்துவ தேவைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முப்பத்தி ஆறு வயது நபர் Terence Kelly நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கும் சிறுமி Cleo Smith குடும்பத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை பிரீமியர் Mark McGowan நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேநேரத்தில் கடத்தலில் விடுபட்ட நபருக்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடும் கும்பலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/2ZZn1Mo