Breaking News

COP 26 பருவநிலை மாற்ற மாநாடு : நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இருந்து பின்வாங்க 80 நாடுகள் கையெழுத்து – பட்டியிலில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா இடம்பெறவில்லை

COP26 கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் உலகை அச்சுறுத்தி வரும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் மற்றும் பருவநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்நிலையில் நிலக்கரி மூலமாக மின்சாரத்தை தயாரிக்கும் நாடுகள் அதிலிருந்து பின்வாங்க வேண்டும் என்றும், அதன் மூலமாக உருவாகும் கரியமில வாயு வெளியேற்றம் பெருமளவு பருவநிலை மாற்றத்திற்கு பிரச்சனையாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அது தொடர்பான உறுதிமொழி ஒப்பந்தத்தில் 80 நாடுகள் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இருந்து பின் வாங்குவதற்கு கையெழுத்திட்டன.

உலக அளவில் தற்போது 35 சதவீத மின்சார தேவையை நிலக்கரி மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் நிலக்கரி மற்றும் நிலக்கரி மின்சாரம் உள்ளிட்டவற்றை சார்ந்திருக்கும் முக்கிய நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில் மேற்கண்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் கையெழுத்து இடவில்லை.

COP 26 Climate Change Conference. 80 countries sign on to withdraw from coal-fired power generation - Australia, China, US not on list..நீண்ட காலத்திற்கு நிலக்கரியின் பயன்பாட்டை நீட்டிக்க முடியாது என்றும், அதனை முடிவுக்கு கொண்டு வருவதே உடனடி தீர்வு என்றும் COP 26 மாநாட்டின் தலைவரும், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான அலோக் ஷர்மா கூறியுள்ளார். நிலக்கரியை எரிப்பதன் மூலமாக வெளியேறும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதாகவும், உலக அளவில் ஏற்படும் பருவநிலை மாற்றத்திற்கு நிலக்கரி சவாலாக விளங்குவதாகவும் அலோக் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

பணக்கார நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகள் 2030 -ல் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேறுவதாகவும், ஏழ்மை நாடுகள் 2040 -ல் வெளியேறுவதாகவும் COP 26 மாநாட்டில் உறுதி பூண்டுள்ளதாக மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளார். மேற்கண்ட நாடுகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிலக்கரி தொடர்பான எந்த முதலீட்டையும் மேற்கொள்ள மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

பிரிட்டனை காட்டிலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அதிக அளவில் நிலக்கரி பயன்பாட்டில் இருப்பதால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் போனது ஆச்சரியம் அளிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய பருவநிலை மாற்ற நிபுணர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நிலக்கரி விவாகரத்தை முதன்மைபடுத்தி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு உற்பத்தி குறித்து விவாதிப்பதை தவிர்ப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிலக்கரிக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முதலீடு, திட்டங்களை நாடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும், அதுவே படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டில் வெளியேற வழி ஏற்படும் என்று COP 26 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3mLv8oq