Breaking News

ஆஸ்திரேலியாவின் கார்பன் வாயு பூஜ்ஜிய வெளியேற்ற இலக்கு 2050 தொடர்பான திட்டங்கள் : ஆஸ்திரேலியாவின் வழிமுறைகள் தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் ஸ்காட் மோரிசன்

Australia's carbon dioxide emission target 2050 plans. Prime Minister Scott Morrison has released a detailed report on Australia's mechanisms.

2050 -ல் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கு ஆஸ்திரேலியா மேற்கொள்ள உள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் ஸ்காட் மோரிசன் செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

மேலும் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் ஆஸ்திரேலியா முன்வைக்க உள்ள பிரதான இலக்குகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

ஆஸ்திரேலியாவின் பூஜ்ஜிய உமிழ்வு தொடர்பான திட்டத்தில் எதிர்க்கட்சிகள், தேசிய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து மாற்று கருத்து நிலவி வரும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Australia's carbon dioxide emission target 2050 plans. Prime Minister Scott Morrison has released a detailed report on Australia's mechanismsமேலும் இவற்றை செயல்படுத்துவதற்கான உரிய கால அவகாசம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றை சரிசமமாக கொண்டு தொழில்நுட்ப ரீதியிலான திட்டங்களை ஆஸ்திரேலியா முன் வைத்துள்ளதாகவும் இது அரசியல் மற்றும் அறிவியல் ரீதியிலான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிட்டுள்ள திட்ட அறிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இது முழுக்க முழுக்க ஆசிரியர்களுக்காக மட்டுமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும், இந்த விவகாரத்தில் ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் பயனடையும் வகையில் திட்டங்கள் இருப்பதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

2030 ம் ஆண்டுக்குள் 20 மில்லியன் டாலர் முதலீட்டில் உமிழ்வு இலக்கு தொடர்பான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும், பொதுமக்கள் – தனியார் மற்றும் அரசு முதலீட்டில் 60 முதல் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3EhrUz2