Breaking News

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*100 தொடர் நீச்சல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தியதுடன், முதல் தங்கம் வென்று ஆஸ்திரேலிய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி களைகட்டியுள்ளது. 100க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்தி, பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் 4*100 பிரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் தங்கள் முதல் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.

Australian women's team set a world record in the 4x100m relay at the Tokyo Olympics, winning the first gold.இப்பிரிவில், பிரோண்டி கேம்பெல், கேட் கேம்பெல், எம்மா மெக்கியோன், மெக் ஹாரிஸ் ஆகியோர் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றனர். போட்டி தொடங்கியதும், 4*100 பிரிஸ்டைல் நீச்சல் பிரிவில் முதல் நபராக பிராண்டி கேம்பெலும், இரண்டாவதாக மெக் ஹாரிஸூம், மூன்றாவதாக எம்மா மெக்கோவனும், நான்காவதாக கேட் கேம்பெலும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிபடுத்தினர்.

இவர்கள் இலக்கை 3 நிமிடம் 29.78 நொடிகளில் தங்கள் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

இரண்டாம் இடம் பெற்ற கனடா அணி வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடத்தை பெற்ற அமெரிக்கா வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

3 நிமிடம் 29.78 நொடிகளில் இலக்கை எட்டியது மூலம், 2018 கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலிய அணி செய்த முந்தைய சாதனையை அவர்களே முறியடித்துள்ளனர்.

வெற்றிக்கு பிறகு தன்னுடையை மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கேம்பெல், தங்கள் அணியினர் மிகச்சிறப்பாக விளையாடியதாகவும்,

Australian women's team set a world record in the 4x100m relay at the Tokyo Olympics, winning the first goldதங்களுக்குள் இருந்த ஒற்றுமையின் காரணமாக எந்த விதமான மன அழுத்தமும் இன்றி இந்த வெற்றியை ஈட்ட முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்கப்பதக்கத்தை வென்ற தருணத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று ஹாரிஸ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். அதே போல ஆண்கள் 400 மீட்டர் பிரி ஸ்டைல் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜாக் மெக்லோகின் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் ஆண்கள் 400 மீட்டர் தனி நபர் நீச்சல் பிரிவில் பிரெண்டன் ஸ்மித் வெண்கலப்பதக்கத்தை தன் வசப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு ஆண்கள் தனி நபர் 400 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ராப் வூட் ஹவுஸ் ஆஸ்திரேலியா சார்பாக பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3y4PPPu