Breaking News

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கிய இன்-பா சூறாவளி புயலால் ஷாங்காய் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

All Shanghai flights have been canceled due to Hurricane In-Ba that hit the east coast of China.

சீனாவில் இன் -பா சுறாவளியின் காரணமாக பல மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய துறைமுக நகரமாக விளங்கும் ஜோஸ்ஹான் நகரத்தில் ஜீஜியாங் கடற்கரை அருகே சரியாக ஞாயிறு பகல் 12:30 மணியளவில் புயல் கரையை கடக்க தொடங்கியதாக சீன வானியல் நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சீன பகுதியை புயல் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் 1 கோடி பேர் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

All Shanghai flights have been canceled due to Hurricane In-Ba that hit the east coast of China,இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜீஜியாங் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கவும், சேதத்தை குறைக்கவும் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஜோஷுவான் நகர சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 1000க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்துள்ளன. இந்நிலையில் இன் -பா சூறாவளி ஞாயிறு நள்ளிரவு ஜீஜீயாங் நகரத்திற்கும்- ஜியாங்சூ மாகாணத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சூறாவளி புயலானது மணிக்கு 15 கி மீ வேகத்தில் நகர்வதாக சீன வானிலை நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புயல் மணிக்கு 137 கிமீ வேகத்தில் வீசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

All Shanghai flights have been canceled due to Hurricane In-Ba that hit the east coast of Chinaஇந்த எச்சரிக்கையின் காரணமாக ஜீஜியாங்க் மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதிகபட்ச புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான சாலை போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரத்தில் சுமார் 2கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்த நகரத்திற்கான அனைத்து விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரத்தில் பாதாள தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ள மாகாண அரசு அதிகாரிகள், டிஸ்னி லேண்ட் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3iFt9yI

leave a reply