Breaking News

மெக்ஸிகோவில் காணாமல் போன தனது மகனை தீவிரமாக தேடும் தாய் : ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகும் சோகம்

Mother actively searching for her missing son in Mexico. The tragedy of the disappearance of thousands every year.

மெக்சிகோவின் Los Mochis நகரத்தைச் சேர்ந்த Mirna Quiñones தனது 14-வது வயதில் திருமணம் செய்து கொண்டு ஒன்பது ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் கருவுற்று மகனை ஈன்றெடுத்துள்ளார். தற்போது 21 வயதாகும் Roberto Corrales Medina கடந்த 2014ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியில் தாய் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மெக்சிகோவில் மருந்து கடத்தல், வன்முறை உள்ளிட்ட காரணங்களால் நாடு கடத்தப்படுவது மற்றும் காணாமல் போவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 90 ஆயிரம் பேர் இதுவரை மெக்ஸிகோவில் காணாமல் போய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் சடலங்களாக பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Mother actively searching for her missing son in Mexico. The tragedy of the disappearance of thousands every year,.Roberto Corrales Medina கடைசியாக Los Mochis பெட்ரோல் வழங்கும் நிலையம் ஒன்றின் முன்பாக சிடிக்களை விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும் அன்றைய தினமே தான் கடைசியாக தன் மகனை பார்த்ததாகவும் Mirna கூறியுள்ளார். எனது மகனைப் பற்றி மிக அதிகமாக பேசி இருப்பதாகவும் தங்களுக்கு கிடைத்த அருமையான குழந்தை ராபர்டோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகன் காணாமல் போன பின்பு தாய் பதிவு செய்த காணாமல் போனோர் பற்றிய புகாரை கூட காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தனது மகனை தேடும் பணியில் தானே தீவிரமாக இறங்கியுள்ளார் புறநகர் பகுதிகளில் உள்ள நிலப் பகுதிகளில் எங்கேனும் மகனின் சடலம் கிடைக்கிறதா என்கிற அளவில் தனது தேடுதல் பணியை Mirna தொடர்ந்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் மெக்சிகோவில் இதுபோன்று காணாமல் போவது தொடர்வதாகவும் பெரும்பாலும் மருந்து கடத்தல் வன்முறைகளில் இளைஞர்களே அதிகம் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் Roberto விவகாரத்தில் அவர் எந்தவித கடத்தல் சம்பவங்களும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mother actively searching for her missing son in Mexico. The tragedy of the disappearance of thousands every year2018 ஆம் ஆண்டு முதல் தற்போது காணாமல் போவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் கடந்த ஆண்டு 7 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும் தேசிய தேடுதல் ஆணையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ குடியரசு தலைவர் Andres Manuel Lopez Obrador பதவியேற்ற பின்பு காணாமல் போனோரின் பெரும்பாலான சடலங்கள் மீட்கப் பட்டிருப்பதாகவும், அவர்களது குடும்பத்தினரிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புறநகர் பகுதிகளில் இருக்கும் வறண்ட நிலங்கள் குன்றுப் பகுதிகளில் பள்ளத்தாக்குகள் மலைமுகடுகள் என பல்வேறு இடங்களில் சடலங்கள் புதைக்கப்பட்ட இருப்பதாகவும் அது போன்ற பகுதிகளில் தனது மகனை தேடும் Mirna பணியில் ஈடுபட்டிருந்தார். அவரோடு மற்றொரு தாயும் தனது மகனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட அவரோடு இணைந்து கொண்டார்.

அதே நேரத்தில் மெக்சிக்கோவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது வரை 120 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனோர் பற்றிய விவரங்களை பதிவு செய்த பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் இது போன்ற ஏராளமான கதைகள் மெக்சிக்கோவில் ஒவ்வொரு வீடுகளிலும் இருப்பதாகவும், பிரியத்துக்குரிய மகன், கணவர் காணாமல் போவதும் அவர்கள் மீண்டும் சடலமாக கிடைப்பதும் பெரும் துயரம் Mirna என்று குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவில் இதுவரை சிறு சிறு குழுக்களாக 60 அமைப்புக்கள் இதுபோன்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் நேரடியாக தேடும் இதுபோன்ற குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3eQdueZ