Breaking News

ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலக பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு : சம்பவத்தின்போது அலுவலகத்தில் இருந்த நபரிடம் தொடரும் விசாரணை

2019 ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியரான Brittany Higgins உடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரிசன் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சம்பவத்தின்போது பிரதமர் அலுவலகத்தில் இருந்த Phil Gaetjens இடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Australian Prime Minister's Office sexual assault case. Continuing investigation into a person who was in office at the time of the incident.இந்த விவகாரத்தில் குற்ற விசாரணைக்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கைக எடுப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இரண்டாவது முறையாக விசாரணையை பிரதமர் மோரிசன் நிறுத்தி வைத்தாகவும் Gaetjens தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஆர்வம் செலுத்தி வந்த பிரதமர் ஸ்காட் மோரிசன் அதற்கு பிறகாக விசாரணையின் போக்கில் கவனம் செலுத்த விரும்பவில்லை. இந்நிலையில் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக இந்த இரண்டாம் கட்ட விசாரணையில் Gaetjens இணைவதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அலுவலகத்தில் சம்பவத்தின்போது இருந்தவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணை வளையமும் விரிவடைந்து வருகிறது.

Brittany Higgins -பாலியல் வன்கொடுமை செய்த பிரதமர் அலுவலக அதிகாரி அடுத்த மாதம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், காவல்துறையின் குறுக்கு விசாரணை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் அதாவது மத்திய தேர்தலுக்குள் இந்த விசாரணை முடிவடைய வேண்டும் என்றும், அதற்காக வழக்கு விசாரணையில் வேகம் காட்டி வருவதாகவும் Gaetjens தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3gLCJ3g