Breaking News

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியர்களை பத்திரமாக வெளியேற்றுவது தொடர்பான நடவடிக்கை : பாதுகாப்பான பாதையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கோரிக்கை

Action on the safe evacuation of Australians from Afghanistan. Prime Minister Scott Morrison calls for a safer route

ஆப்கானிஸ்தானில் இருந்து பத்திரமாக வெளியேறுவதற்கான நடவடிக்கையில் ஏராளமானோர் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கான தனி பாதையை உருவாக்கும் முயற்சிக்கு தாலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எஞ்சியுள்ள மற்ற நாட்டினர் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கான பாதுகாப்பான பாதையை உருவாக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Action on the safe evacuation of Australians from Afghanistan. Prime Minister Scott Morrison calls for a safer route.இந்நிலையில் 20 ஆண்டுகால ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு தனது படைகளை முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பியது. தலைநகர் காபூலில் இருந்து கடைசி ராணுவ வீரர் வெளியேறும் புகை படத்தை அமெரிக்கா வெளியிட்டு, ஆப்கனில் இருந்து முழுவதுமாக தாங்கள் வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறியதை தாலிபான்கள் துப்பாக்கி குண்டுகளை முழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள மற்ற நாட்டினர் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் பயண அனுமதி விசா உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்கும் ஆப்கானியர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாதுகாப்பான வழிமுறைகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தாலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.

அமெரிக்கா தனது போரை முழுவதுமாக முடித்துக்கொண்டு உள்ள நிலையில் இதுவரை மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் சூழல் இல்லை என்றும், அதனை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கான கணிசமான வழிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Action on the safe evacuation of Australians from Afghanistan. Prime Minister Scott Morrison calls for a safer route..ஆப்கானிஸ்தான் தற்போது சீரழிவுக்கு உள்ளாகும் நாடாக மாறி இருக்கும் நிலையில் அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டு நாடு திரும்புகையில் நடைபெற்ற அதே சூழல் தான் தற்போதும் ஆப்கானிஸ்தானில் நிலவுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அசாதாரண சூழல் மாறியவுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைவரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும், இந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ஆப்கானிஸ்தான் இவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு இசைவு தெரிவிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3mUMIqP