Breaking News

ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் ஆஸ்திரேலிய துருப்புகளை அனுப்புவது தொடர்பாக ஆலோசனை : பாராளுமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று செனட்டர் கோரிக்கை

Consultation on sending Australian troops back to Afghanistan. Senator demands that Parliament make a final decision

தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அமைதியற்ற சூழல் தொடர்பாக ஆஸ்திரேலியா பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியர்களையும், படைவீரர்களையும் முழுமையாக வெளியேற்றுவது தொடர்பாகவும், மேலும் அமெரிக்கா நடத்திவரும் பதில் தாக்குதலில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

Consultation on sending Australian troops back to Afghanistan. Senator demands that Parliament make a final decision.ஐ எஸ் ஐ எஸ் கே அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் மூலமாக பதிலடி அளித்துள்ள நிலையில், மீண்டும் ஐஎஸ் கே அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் தலைநகர் காபூல் விமான நிலையத்தையே குறி வைத்து இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய படைகளை மீண்டும் ஆப்கானிஸ்தான் அனுப்புவது தொடர்பாகவும், அங்கு போர் மூளும் பட்சத்தில் அதில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆளும் அரசுக்கும், எதிர்க் கட்சிக்கும் விவாதம் நடைபெற்றது.

பிரதமர் ஸ்காட் மாரிசன் உள்ளிட்ட அமைச்சரவையின் முடிவு ஆஸ்திரேலிய படைகளை அனுப்ப வேண்டும் என்பதாக இருக்கும் நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Greens Senator Jordon Steele-John கேட்டுக்கொண்டுள்ளார்.

Consultation on sending Australian troops back to Afghanistan. Senator demands that Parliament make a final decision..ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் மனிதத்தன்மையற்ற சூழலை ஆஸ்திரேலியா கருத்தில் கொள்கிறது என்றும், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இணைந்து தாக்குதல் நடத்துவது சரியான முடிவாக இருக்காது என்றும் செனட்டர் தெரிவித்துள்ளார். போரில் பங்கேற்பது என்பது தேசிய அளவிலான முடிவு என்றும், அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அதன்படி முடிவு எடுக்க வேண்டும் என்றும் Greens Senator Jordon Steele-John தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்த காரசார விவாதம் காரணமாக அவை நிறைவேற வேண்டிய மற்ற மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போனது. இந்த விவகாரத்தில் அரசு எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/3zCIPuc