Breaking News

மாகாணங்களில் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு : வேலைவாய்ப்பு விவகாரம் தேர்தலில் அதிகம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தகவல்

Australian PM Scott Morrison announces significant increase in employment in provinces

ஆஸ்திரேலியாவில் பொது தேர்தலை ஒட்டி பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரதமர் ஸ்காட் மோரிசன் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தில், வேலைவாய்ப்பு குறித்த பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளார். மாகாணங்களில் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் என்றும் அது இனி வரும் காலங்களில் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Australian PM Scott Morrison announces significant increase in employment in provinces.அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மாகாணங்களுக்கான நிறுவனமான RAI தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாகாணங்களில் 84 ஆயிரத்து 400 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை விட தற்போது காலி பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் 2019ம் ஆண்டு 43 ஆயிரத்து 612 பணியிடங்கள் இருந்ததாகவும் RAI கூறியுள்ளது. நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக தேடி வரும் நிலையில் உரிய தகுதிகளுடன் கூடிய பணியாளர்கள் கிடைக்காத நிலை இருப்பதாகவும், பிரதமர் தேர்தலை மனதில் கொண்டு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வருவதகாவும் கூறப்படுகிறது.

Australian PM Scott Morrison announces significant increase in employment in provinces,50க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாளர்கள் இடமாற்றம் செய்து கொண்டிருப்பதாகவும், குறிப்பாக வேளாண் துறையில் இருந்து கல்வித்துறைக்கும் மருத்துவத்துறையில் இருந்து விருந்தோம்பல் துறைக்கும் பணியாளர்கள் இடமாற்றம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் ஆஸ்திரேலியாவில் உருவாகும் என்றும் இதன் மூலம் வேலைவாய்ப்பின்மை தடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாகாணங்களில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருவதாகவும், ஊதிய விவாகரத்தில் கடும் சிக்கல்கள் எழுவதாகவும் கூறப்படுகிறது.