Breaking News

இந்தியாவில் இருந்து வாங்கப்பட்ட 13 பராம்பரிய ஓவியங்களை ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் திரும்ப ஒப்படைக்கிறது : திருடப்பட்ட பொருள் என்பதை அறிந்து திரும்ப ஒப்படைப்பதாக அருங்காட்சியக நிர்வாகம் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து பல்வேறு சிலைகளை கடத்தி வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாக கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு புராதன சிலைகள், ஓவியங்கள், ஐம்பொன் சிலைகள், வரலாற்று சிறப்புமிக்க கலைப்பொருட்கள் என அனைத்தையும் பல்வேறு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து சிலைகள், கலைப்பொருட்கள், ஓவியங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிமூன்று ஓவியங்களை அருங்காட்சியக நிர்வாகம் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது.

Australian National Museum returns 13 traditional paintings purchased from India Museum management announces return of stolen items,இந்தியாவின் கலாச்சாரத்தை குடும்ப அமைப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான 13 ஓவியங்கள் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இவை அனைத்தும் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பதை அறிந்து அருங்காட்சியக நிர்வாகம் இதனை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளது. 6 சிலைகள் மற்றும் 6 புகழ்பெற்ற ஓவியங்கள் ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அல்லது அங்கிருந்து திருடப்பட்டு இருப்பதாகவும் தாங்கள் அறிவதாக ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியக இயக்குநர் Nick Mitzevich கூறியுள்ளார்.

இதனிடையே கலைப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளில் இன்னும் உறுதியாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எந்தவித சமரசமும் இன்றி இதுபோன்ற நடவடிக்கைகளை தாங்கள் கண்டிப்பதாகவும் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

Australian National Museum returns 13 traditional paintings purchased from India Museum management announces return of stolen items,.10.7 மில்லியன் டாலர் அளவுக்கு சுபாஷ் கபூர் இடமிருந்து 22 கலைப்பொருட்களை கடந்த சில ஆண்டுகளில் வாங்கியதாகவும், பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் ஐம்பொன் சிலை, சிவன் நடராஜர் சிலை போன்றவையும் இதில் அடங்கும் என்றும் அருங்காட்சியக நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலானவற்றை தாங்கள் உரிய நாடுகளிடம் திரும்ப ஒப்படைத்து இருப்பதாகவும், அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து பொருட்களின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு எந்தவிதமான சட்ட விரோத பொருட்களும் இல்லாத வகையில் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/37aeu9G