Breaking News

சிட்னியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hundreds of soldiers are expected to be involved in the curfew in Sydney.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவியுள்ள பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தற்போது சிட்னியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ராணுவத்தின் உதவி தேவை என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை ஆணையர் மிக் புல்லர் பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

Hundreds of soldiers are expected to be involved in the curfew in Sydney,தொற்று பரவல் பாதித்த பகுதிகள் அதிகரிக்கும் நிலையில் அதனை கண்காணிப்பதால், காவல்துறையினருக்கு மன அழுத்தமும் பனிச்சுமையும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டே ராணுவத்தின் உதவியை கோரியதாக கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக பல்வேறு தருணங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் ராணுவம் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை ஆணையர் மிக் புல்லர் விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக தனிமைபடுத்தப்பட்ட விடுதிகளை கண்காணிப்பது, மாநில எல்லைகளை பாதுகாப்பது, அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல என்று அனைத்திலும் ராணுவத்தின் பங்களிப்பு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஆணையரின் கோரிக்கையை பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் டுட்டன் ஏற்றுக்கொண்டதாகவும், ஜூலை 30 ஆம் தேதி ராணுவ வீரர்கள் சிட்னி வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காவல்துறை வழிகாட்டுதலின் படி பணிபுரிவார்கள் என்றும், வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தங்கள் பணியை தொடங்குவார்கள் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கும்பர்லேண்ட் நகர மேயர் ஸ்டீவ் கிருஸ்டூ, ராணுவத்தை கொண்டு ஊரடங்கை அமல்படுத்துவது மோசமான உதாரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Hundreds of soldiers are expected to be involved in the curfew in Sydneyமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், ராணுவத்தை கொண்டு ஊரடங்கை அமல்படுத்துவது என்பது வேதனையளிக்கும் நடவடிக்கை என்று ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் சுமார் 1300 ராணுவ வீரர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களில் சுமார் 13000 ராணுவ வீரர்கள் இந்த தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/378MEdM