Breaking News

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 29 அகதிகள் : நாடற்றவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட விளையாட்டு

29 refugees participating in the Tokyo Olympics. A game that turned the lives of stateless people upside down

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 2021 ஒலிம்பிக் போட்டிகளில் அகதிகள் அணி என்ற பிரிவில் 29 பேர் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் விளையாடி வருகின்றனர்.

போர் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களில் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி புதிதாக அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை உருவாக்கியது.

29 refugees participating in the Tokyo Olympics. A game that turned the lives of stateless people upside down.இந்த அணியில் சொந்தநாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த அணி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. அகதிகள் ஒலிம்பிக் அணியில் 29 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஒரு சில வீரர்கள் விளையாடிய நிலையில் 2016 ஆம் ஆண்டு இதுபோன்ற அணி உருவாக்கப்பட்டது. 2016 ம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தெற்கு சூடானை சேர்ந்த Rose Nathike தொடக்க நிகழ்வில் கொடியை ஏந்திச் செல்லும் வீரராக வாய்ப்பு பெற்றார். எட்டு வயதில் பெற்றோருடன் அகதியாக புலம்பெயர்ந்த Rose Nathike, 2 லட்சம் அகதிகள் வசிக்கும் முகாமில் வசித்து வந்தார்.

உலகம் முழுவதும் 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி 82 மில்லியன் புலம்பெயர்ந்தோர் வசித்து வருவதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

29 refugees participating in the Tokyo Olympics. A game that turned the lives of stateless people upside down,.Rose Nathike முகாமிலிருந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் 2014ஆம் ஆண்டு அத்லெட்டாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தேசிய அளவில் வீராங்கனையாக அறியப்பட்டார். 2010 லண்டனில் நடைபெற்ற போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர், 2019 ஒலிம்பிக் போட்டியிலும் தற்போது இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியிலும் Rose Nathike பங்கேற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதே நேரத்தில் தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்கி பல்வேறு புலம்பெயர்ந்த ஒரு முன்மாதிரியாக திகழ்வேன் என்றும் Rose Nathike நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3zKTpyA