Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் பீல் பகுதியில் நான்கு நாள் ஊரடங்கு நிறைவுக்கு வந்தது : கடைசி நாளில் சமூக பரவல் மூலமாக ஒருவருக்கு தொற்று உறுதி

புதிய வகை வைரஸ் பரவல் அதிகரித்ததன் காரணமாக மேற்கு ஆஸ்திரேலியாவில் மற்றும் பீல் பகுதிகளில் 4 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் நான்கு நாள் ஊரடங்கு முடிவுக்கு வந்ததாகவும், மேலும் சில கட்டுப்பாடுகள் மட்டும் தொடரும் என்றும் மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டுக்கு உள்ளேயும், வெளியில் வரும்போதும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமை பெறும் வரை ஊரடங்கு ஒன்று நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் என்றும் இனி வரும் காலங்களில் தேவைப்படும் பட்சத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ப்ரீமியர் Mark McGowan கேட்டுக்கொண்டுள்ளார்.

Four-day curfew ends in Perth and Peel, Western Australia.இதனிடையே ஊரடங்கும் கடைசி நாளில் சமூகப் பரவல் மூலமாக ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபரிடமிருந்து இவருக்கு வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இருந்த ஐம்பத்தி ஒரு வயது பெண்ணுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெர்த் வடக்கு பகுதிகளில் மூன்று பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையில் நெகட்டிவ் என்று கண்டறியப்பட்ட 21 வயது பெண் ஒருவர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் 11 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் தொடர்பு சங்கிலியில் உள்ள 383 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 356 பேரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொது அரங்கக் கூட்டங்கள் தனி நபர் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அடுத்த ஊரடங்கு நடவடிக்கைக்கு தற்போதைய தயாராக வேண்டும் என்றும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3jLg4q2