Breaking News

ஆஸ்திரேலியா – லண்டன் இடையிலான விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது : டார்வின் வழியாக விமானத்தை இயக்க உள்ளதாக Qantas அறிவிப்பு

Australia - London flights begin next month. Qantas announces plans to operate flights via Darwin

அடுத்த வகை வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து இதன் காரணமாக சர்வதேச எல்லைகளில் மூடப்பட்டன. இதன் காரணமாக விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் சர்வதேச எல்லைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாகாணங்களில் இந்த ஆண்டுக்குள் முழு இலக்கை எட்டிவிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எல்லைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியா – லண்டன் இடையிலான விமான சேவை நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி 2022 ஏப்ரல் இறுதி வரைக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் Transit எனப்படும் விமானம் மாறிச் செல்லும் இடைநிற்றல் இடமாக பெர்த் இருந்த நிலையில் அது தற்போது டார்வின் – ஆக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை Qantas உறுதிப்படுத்தியுள்ளது.

மெல்போர்ன், சிட்னியில் இருந்து இயக்கப்படும் டார்வின் விமான நிலையம் வழியாக லண்டன் செல்லும் என்றும், பெர்த் விமான நிலையத்திற்கு செல்லும் விமானச் சேவை இனி வழங்கப்படமாட்டாது என்றும் Qantas தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம் தற்காலிகமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றும், விமானச் சேவையின் உடைய செயல்பாடுகளை பொறுத்து பயணிகளின் உடைய தேவையின் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் Qantas நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Alan Joyce கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு பிறகு விமான சேவைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மிகவும் பாதுகாப்பானதாகவும் திட்டமிட்ட பயணமாக இருக்க தாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக Alan Joyce குறிப்பிட்டுள்ளார்.

Australia - London flights begin next month. Qantas announces plans to operate flights via Darwin.சர்வ தேச எல்லைகள் மூடப்பட்டு அதன் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக மோரிசன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக விடுதி தனிமைப்படுத்துதல் இல்லாமல் அவரவர் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை அரசு வெளியிட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக லண்டனில் சிக்கித் தவித்த ஆஸ்திரேலியர்கள் தற்போது டார்வின் வழியாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானச் சேவையை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் அனைவரும் நாடு திரும்பலாம் என்றும் Alan Joyce தெரிவித்துள்ளார்.

இந்த வழியில் விமானச் சேவையை இயக்கப்படுவது என்பது நாடு திரும்பும் பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எளிதானதாக இருக்கும் என்று Qantas கூறியுள்ளது.

Link Source: https://ab.co/3aodtw3